தி.உதயசூரியன்.
வாடிப்பட்டி தாலுகா செய்தியாளர்.
செல்: 8098791598.
அலங்காநல்லூர்,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சமுதாய கூடத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பில் அலங்காநல்லூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து மளிகை கடைகள், ஹோட்டல், பேக்கரி, பிராய்லர் கடை, பழக்கடை, இறைச்சி கடை, சாலையோர வியாபார உணவு வணிகர்களுக்கான போஸ்டேக் (FSSAI) இலவச பயிற்சி வகுப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் அலங்காநல்லூர் மற்றும் மதுரை மேற்கு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயகுமார், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ராஜ்குமார், சந்திரமோகன், ஆகியோர் தலைமை தாங்கினர். பரிக்சன் பயிற்சியாளர் கார்த்திகா, வணிகர்களுக்கு பயிற்சி வழங்கினார். பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் முகாமை தொடங்கி வைத்தார்.
வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மந்திரம் ஸ்டோர் பாலா, மற்றும் மெர்லின் பேக்கரிராஜா, ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த முகாமில் போஸ்டேக் பயிற்சி, உணவு பாதுகாப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேலும் வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு சான்றிதழ் வழங்குதல், கடைகளுக்கு புதிய உரிமம் மற்றும் சான்றிதழ் புதுப்பித்தல், பதிவு சான்று வழங்குதல், பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு போஸ்டேக் சான்றிதழ் வழங்கப்பட்டது.