தே.பண்டரிநாதன்(எ) அண்ணாதுரை
துணை ஆசிரியர் டைம்ஸ் ஆப் தமிழ்நாடு
செல் 9994189962
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும்,முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் அவர்கள் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

உலக மக்கள் அனைவருக்கும் அன்பு, பரிவு, கருணை, நல்லொழுக்கத்தை போதித்த ஏசுபிரானின் பிறந்த நாளான இந்நன்னாளை கிறிஸ்துமஸ் தின நாளாக கொண்டாடும் அனைத்து கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்:
மதத்தின் பெயரால் மக்களைப் பிரித்தாலும், அரசியல்வாதிகளின் துர்போதனைக்கு ஆளாகாமல் நாம் அனைவரும் கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என்ற பாச உணர்வோடு ஒருவர் மீது ஒருவர் சுயநலமிக்கா அன்பு செலுத்தி வாழ வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த அரசாக இருந்தாலும் அனைத்து மதத்தினருக்கும் உரிய மரியாதை அளிப்பதும், சமமாக பாவிப்பதும் அரசின் கடமையாகும்.
புதுச்சேரியை ஆளும் அரசானது கிறிஸ்தவ மக்களுக்கு எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. குறிப்பாக தமிழகத்தில் மாண்புமிகு எடப்பாடியார் தலைமையிலான அதிமுக ஆட்சியில் ஜெருசலம் செல்லும் கிறிஸ்தவ மக்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது. புதுச்சேரியிலும் ஜெருசலம் செல்லும் கிறிஸ்தவ மக்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு இன்று வரை செயல்படுத்தப்படவில்லை. கிறிஸ்தவர், முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மை இனத்தை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கும், கடந்த 8 வருடங்களாக ஒருவருக்கு கூட அரசு மூலம் சுய உதவி தொழில் செய்ய கடன் உதவி அளிக்கப்படவில்லை.
மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களுக்கு அட்டவணை இனத்தை சேர்ந்த மக்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை வழங்க அதிமுக துணை நிற்கும்.
மீண்டும் அனைத்து கிறிஸ்துவ சகோதர, சகோதரிகளுக்கும் எனது அன்பான இதயங் கனிந்த இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.