தே.பண்டரிநாதன்(எ) அண்ணாதுரை
துணை ஆசிரியர் டைம்ஸ் ஆப் தமிழ்நாடு
செல் 9994189962
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் K.கைலாஷ்நாதன் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் கூறியதாவது
உலகம் எங்கும் வாழும் கிறிஸ்துவ சகோதர-சகோதரிகள் அனைவருக்கும் குறிப்பாக புதுச்சேரியில் வாழும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பு, தியாகம், எளிமை, ஈகை போன்ற வாழ்வியல் நெறிகளை போதித்த இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாள் கொண்டாட்டம், உலக மக்கள் மத்தியில் சகோதரத்துவத்தையும், சமாதமானத்தையும் வளர்க்க வேண்டும்.
மத, இன எல்லைகளைக் கடந்து அனைவரிடத்திலும் நமது அன்பைப் பரிமாறிக் கொண்டு கிறிஸ்துமஸ் விழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம் என்று தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்