தே.பண்டரிநாதன்(எ) அண்ணாதுரை
துணை ஆசிரியர் டைம்ஸ் ஆப் தமிழ்நாடு
செல் 9994189962

காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் தந்தை பெரியார் ஈ.வே.இராமசாமி அவர்களின் 51 -ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அமைந்துள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு
குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் PRN.திருமுருகன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவினார்கள்.
மேலும் இந்நிகழ்வில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.D.மணிகண்டன், காரைக்கால் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜானியா, காரைக்கால் மாவட்ட கல்வித்துறை அதிகாரி விஜய மோகனா ஆகியோர்களும் மாலை அணிவித்து மழைத்துளி மரியாதை செய்தனர்.