சீர்காழியில் நடைபெற்ற கிறிஸ்மஸ் பெருவிழாவில் மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமா நிவேத எம்.முருகன் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டி குழந்தைகளுக்கு ஊட்டி உற்சாகமாக கொண்டாடினர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த சின்ன பெருந்தோட்டம் கிராமத்தில் அன்பின் வார்த்தை ஊழியங்கள் திருச்சபை சார்பாக கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்பட்டது. ஏ ஐ சி சி டெல்டா மாவட்ட தலைவர், பிஷப் டாக்டர் எட்வின் வில்லியம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மாவட்ட செயலாளர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நிவேதா எம். முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் கேக் வெட்டி குழந்தைகளுடன் கொண்டாடினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் சீகன்பால்கு மணிமண்டபம் அமைத்து தர பரிந்துரை செய்த சட்டமன்ற உறுப்பினருக்கு அன்பின் வார்த்தை ஊழியங்கள் திருச்சபையின் சார்பாக நன்றி தெரிவித்து பாராட்டப்பட்டது. மேலும் கிறிஸ்துமஸ் விழாவில் அப்போஸ்தலர் தங்கதுரை, சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் பஞ்சு குமார், ஒன்றிய செயலாளர்கள் அப்துல் மாலிக் அன்பழகன் மற்றும் பழுது கிராம பஞ்சாயத்தார்கள் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும், சொற்பொழிவுகளும் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *