கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கும்பகோணம் அருகே
சுவாமிமலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தெருமுனை பிரச்சாரம்…
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை வடக்கு மாவட்ட சுவாமிமலை கிளை சார்பில் தெருமுனைப் பிரச்சார கூட்டம் மாவட்டத் துணைச் செயலாளர் பர்கத்துல்லா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட பேச்சாளர்கள் அலி முகமது,ஷேக் தாவூத் ஆகியோர் கலந்து கொண்டு தமிழகத்தில் சீரழியும் இன்றைய இளைய சமுதாயம் பற்றிய விழிப்புணர்வு பற்றி சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கிளை தலைவர் மீரான், செயலாளர் ஜெயிலானி ,பொருளாளர் அப்துல்லா மற்றும் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்