அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மாடர்ன் கலைக் கல்லூரியில் சென்னை சூப்பர் கிங்ஸ் நடத்தும் ஜூனியர் சூப்பர் கிங்ஸ் T 20 கிரிக்கெட் போட்டி பள்ளி மாணவர்களுக்கு இடையே மூன்று நாட்கள் நடைபெறும் மாபெறும் கிரிக்கெட் போட்டி அரியலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைபெற்றது இதில் அரியலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட பள்ளி மாணவர்கள் ஆறு குழுவினராக போட்டியில் பங்கேற்கின்றனர் மாவட்ட அளவில் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் குழுவினர் திருச்சியில் நடைபெறும் போட்டியில் பங்கேற்று மாநில அளவில் போட்டியிட தகுதி பெற்றவர் ஆவார் இதில் மாடர்ன் கல்வி குழுமத்தின் துணைத் தலைவர் எம் கே ஆர் சுரேஷ் கிரிக்கெட் மட்டையை பிடித்து போட்டியினை துவக்கி வைத்தார் இதில் அரியலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் வெங்கடேசன் துணைச் செயலாளர் குணாளன் மற்றும் ஜெயங்கொண்டம் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்