D.பண்டரிநாதன்(எ) அண்ணாதுரை துணை ஆசிரியர்
புதுச்சேரி சுனாமி 20–வது ஆண்டையொட்டி, புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் தலைமையில் திமுக–வினர் கடற்கரை காந்தி சிலை அருகில் கடலில் பால் ஊற்றியும், மலர் தூிவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில், திமுக அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி, மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எல். சம்பத், பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ். கோபால், வே. கார்த்திகேயன், ந. தங்கவேலு, மு. பிரபாகரன், தொகுதி செயலாளர்கள் இரா. சக்திவேல், ப. வடிவேல், து. சக்திவேல், மாநில மீனவர் அணி அமைப்பாளர் ந. கோதண்டபாணி உள்ளிட்ட திமுக–வினர் கலந்து கொண்டு, சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.