இராஜபாளையம் சிறுமிக்கு பாலியல் தொல்லை போட்டோ கிராபர் போக்சோ சட்டத்தில் கைது!
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன்( 55 ) இவருக்கு
உடல் நலம் குன்றிய மனைவி மற்றும் மகன்,மகள் உள்ளனர் சினிமா தியேட்டரில் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார் தற்போது சேத்தூரில் சரண்யா போட்டோகிராபி என்ற பெயரில் அவுட்டோர் போட்டோகிராபராக நிகழ்ச்சிகளில் புகைப்படம் எடுப்பதற்காகவும் சென்று வருகிறார்
இந்த நிலையில் இராஜபாளையத்தில் தொழிலதிபர் ஒருவர் வீட்டில் புகைப்படம் எடுக்க சென்ற பொழுது அங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த சிறுமி ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து அத்துமீறி உள்ளார் உடனடியாக சிறுமி அழுது கொண்டு அருகே இருந்த உறவினர்களிடம் கூறியுள்ளார் உறவினர்கள் அவரை சரமாரியாக அடித்து கண்டித்துள்ளனர்
நிகழ்ச்சி நடத்தியவர்கள் சிறுமியின் உறவினரிடன் மன்னிப்பு கேட்ட நிலையில் முருகேசனும் மன்னிப்பு கேட்டுள்ளார் இதை அடுத்து அவரை மன்னித்து அனுப்பிய நிலையில் இந்த சம்பவத்தினால் சிறுமியின் பெற்றோர் மன வேதனை அடைந்து இராஜபாளையம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்
புகாரைத் தொடர்ந்து இதுகுறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த ஆய்வாளர் செல்வி (பொறுப்பு )தலைமையிலான போலீசார் முருகேசனை அவர் செல்லக்கூடிய பல இடங்களில் விசாரித்துள்ளனர் இறுதியாக தனியார் திருமண மண்டபத்தில் மற்றொரு நிகழ்ச்சியில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று,அதிரடியாக போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் செல்வியிடம் கேட்டபோது இந்த நபர் மேலும் சில இடங்களில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் ஆனால் மாட்டிக்கொள்ளும்போதெல்லாம் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டு தப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது ஆகவேதான் இதுபோன்ற தவறுகளை செய்து வந்துள்ளார்
இது மன்னிக்க முடியாத குற்றம் ஆகவே இதுகுறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்,குற்றங்களுக்கு தண்டனை வாங்கித் தருவது ஒருபுறம் என்றால் குற்றம் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் தேவை என்றார்.