தே.பண்டரிநாதன்(எ)
அண்ணாதுரை டைம்ஸ் ஆப் தமிழ்நாடு துணை ஆசிரியர்
முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைவு- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆழ்ந்த இரங்கல் செய்தியில் கூறியதாவது
முன்னாள் பாரதப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை தருகிறது.
அவர், நாட்டின் மிக உயரிய பதவிகளை அலங்கரித்து, அனைவராலும் போற்றப்பட்ட தலைவராக திகழ்ந்தார். நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் அவர் மேற்கொண்ட செயல்பாடுகள் அரசியல் கடந்து இன்றளவும் எல்லோராலும் பாராட்டப்படுகிறது.
பேராசிரியராக, பொருளாதார நிபுணராக, ரிசர்வ் வங்கியின் தலைவராக, பாரதப் பிரதமராக அவர் ஆற்றிய பணிகளை நாடு என்றென்றும் நினைவில் வைத்திருக்கும் என்று தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்