D.பண்டரிநாதன்(எ) அண்ணாதுரை துணை ஆசிரியர்
முதல்வர் ரங்கசாமி தனது செய்தி அறிக்கையில் கூறியதாவது
முன்னாள் பாரதப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் மறைவுச் செய்தி ஆழ்ந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிப்பதாக உள்ளது.
உலகம் போற்றும் பெருமைக்குரிய பொருளாதார வல்லுனராக விளங்கிய டாக்டர் மன்மோகன் சிங், இந்தியாவின் பொருளாதார மறுமலர்ச்சியின் சிற்பியாகத் திகழ்ந்தவர். சிறந்த நாடாளுமன்றவாதியாகவும் விளங்கிய அவர், இந்திய அரசியலில் கண்ணியம் மிக்க ஒரு தனித்துவமான தலைவர்.
பத்து ஆண்டுகள் பாரத தேசத்தின் பிரதமராக பதவி வகித்த அவர், சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்பதற்காக அனைவருக்குமான வளர்ச்சி என்பதை அடிப்படையாகக் கொண்டு. அவர் செயல்படுத்திய திட்டங்களையும் பொருளாதார சீர்திருத்தங்களையும் தேசம் என்றும் நினைவில் வைத்திருக்கும்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரைச் சார்ந்த ஏனையோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் என்று தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்