செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.

திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் தலைவர்கள் பணி நிறைவு பாராட்டு விழாவில் ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் பங்கேற்று வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கல்வெட்டை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
மேலும் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எதிரொலி மணியன், தெள்ளார் ஒன்றிய குழு தலைவர் கமலாட்சி இளங்கோவன், ஒன்றிய செயலாளர்கள் டிடிராதா, ப.இளங்கோவன், சுந்தரேசன், கேஆர்பி.பழனி சி.ஆர்.பெருமாள், ராமசாமி, வந்தவாசி நகர செயலாளர் தயாளன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.