கடலூர் மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்ககோரியும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வேப்பூர் கூட்டுரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கடந்த மாதம் ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் கடலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை பகுதியில் அதிகளவு மழை பெய்தது இதில் பலரது விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டது
இதுபோல் புயல் வரும்போதெல்லாம் பாதிக்கபடும் கடலூர் மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டம் செய்தனர்
ஆர்பாட்டத்திற்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேப்பூர் வட்டகுழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்
மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவிசந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்
இதில் வட்ட குழு உறுப்பினர்கள் சாமிதுரை ராயர்
இளையராஜா பெரியசாமி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்