தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில், அரியலூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இணை செயலாளர் காந்தி, வட்ட செயலாளர் அம்பேத்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய மாற்றத்தின்போது வழங்கப்படாத 21 மாத நிலுவைத்தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்புத்தொகை உள்ளிட்டவற்றை வழங்கிட வேண்டும். அரசுத்துறையில் உள்ள காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் உடனே நிரப்பிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், சங்கத்தை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.