எபி பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர்.
திமுக இளைஞரணி சார்பில் தெருமுனைப் பிரச்சார கூட்டம் நடைபெற்றது

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம் மற்றும் அரும்பாவூர், பூலாம்பாடி பேரூர் கழகங்களின் சார்பில் கழக இளைஞரணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற தெருமுனை பிரச்சாரக் கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் தலைமை கழக பேச்சாளர்கள் செல்வி செல்வ ஜெயந்தி, செல்வி பெபிலா, மாவட்ட கழக துணை செயலாளர் டி.சி.பாஸ்கர், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் நல்லதம்பி, வேப்பந்தட்டை ஒன்றிய பெருந்தலைவர் ராமலிங்கம், துணை பெருந்தலைவர் ரெங்கராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆதவன் ஹரி பாஸ்கர், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் அபூர்வா ரமேஷ், பேரூர் கழக செயலாளர்கள் . ரவிச்சந்திரன், செல்வ லட்சுமி சேகர், பேரூராட்சி மன்ற தலைவர்கள் வள்ளியம்மை ரவிச்சந்திரன், பாக்கியலட்சுமி செங்குட்டுவன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கவிஞர் அப்துல் கரீம் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.