ராஜபாளையம் அடுத்த செட்டியார்பட்டி பகுதியில் சைக்கிள் கடை வைத்திருக்கும் செல்வம் என்பவர் தன்னிடம் வாடகைக்கு சைக்கிள் எடுக்கவந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததாக கூறி அதன்மீது நடவடிக்கை எடுக்க மேற்படி சிறுமியின் தாயார் தளவாய்புரம் காவல் நிலையத்தில் 08.12.2024 அன்று இரவு புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது புகாரின்பேரில் இராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குற்ற எண் : 38/2024 போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இந்த வழக்கின் அடிப்படையில், குற்றவாளியை கைது செய்திட வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தளவாய்புரம் காவல் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்ட 16 பெண்கள் உட்பட 40 பேர் கைது செய்து மண்டபத்தில் வைக்கப்பட்டு பின்னர் அனுப்பி வைக்கப்பட்டனர்
இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது
இந்த புகார் தொடர்பாக மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து மகளிர் காவல் ஆய்வாளர்,டிஎஸ்பி பிரீத்தி மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஆகியோர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணையின் பின்னர் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.