எஸ் செல்வகுமார் செய்தியாளர்
சீர்காழி
சீர்காழி அருகே தொடுவாய் மீனவர் கிராமத்தில்ரூ.4 லட்சம் மதிப்பிலான மீன்பிடிவலைகள் எரிப்பு. மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை. தொடுவாய் மீனவர்கள் இன்று ஒரு நாள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மனோகர் இவருக்கு சொந்தமான ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகளை அவரது வீட்டில் பாதுகாப்பாக வைத்துள்ளார். இந்நிலையில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நேற்று இரவு அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் மர்ம நபர்கள் அவரது வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த வலைக்கு தீயிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அப்பொழுது வலை அருகே படுத்திருந்த மனோகரின் தாயார் வலை எறிவதை கண்டு கூச்சலிட்டுள்ளார். இதனை அறிந்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக அப்பகுதிக்கு சென்று தீயினை அனைக்கும் பணியில் ஈடுபட்டனர். வலை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் உடனடியாக வெளியே எடுக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த தீவிபத்தில் மனோகருக்கு சொந்தமான நான்கு லட்சம் மதிப்பிலான வலை எரிந்து சேதம் அடைந்துள்ளது. மேலும் இது குறித்து மனோகர் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நள்ளிரவில் வலைக்கு தீயிட்ட நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கோரி தொடுவாய் மீனவர்கள் இன்று ஒரு நாள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.