கோவை சரவணம்பட்டி புரோசோன் மால் வளாகத்தி்ல் கே.ஜி.எஃப் எனும் பிரம்மாண்ட பொழுது போக்கு மற்றும் அனைத்து பொருட்களுக்கான விற்பனை கண்காட்சி துவக்கம்

குழந்தைகளுக்கான விளையாட்டு அம்சங்கள்,அசத்தலான உணவு அரங்குகள் என அனைத்தும் ஒரே இடத்தி்ல் கோவை வாழ் மக்கள் காண அரிய வாய்ப்பு

புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கோவை சரவணம்பட்டி புரோசோன் மால் வளாகத்தில் பிரம்மாண்டமான கோவை கிராண்ட் ஃபெஸ்டிவல் கண்காட்சி துவக்கம்….

என்.ஐ.ஈவென்ட்ஸ் சார்பாக அதன் நிர்வாக இயக்குனர் ராஜா ஒருங்கிணைப்பில் கோவையில் கே.ஜி.எஃப்.(K.G.F.)
எனும் கோவை கிராண்ட் ஃபெஸ்டிவல் எனும் பொழுது போக்கு மற்றும் அனைத்து வகையான விற்பனை கண்காட்சி சரவணம்பட்டி புரோசோன் மால் வளாகத்தி்ல் துவங்கியது..

2025 புத்தாண்டை அனைவரும் கொண்டாடும் விதமாக
டிசம்பர் 27 ந்தேதி துவங்கி 29 ந்தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில் ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகள் சின்னத்திரை பிரபலங்கள்,பிரபல யூ டியூபர்ஸ் என பலர் கலந்து கொள்கின்றனர்..

கோவை வாழ் மக்களுக்கு புதிய அனுபவத்தை தரும் வகையில் துவங்கப்பட்ட இந்த கண்காட்சியில், குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள்,அறுசுவை உணவுகளை உண்டு மகிழ உணவு அரங்குகள்,வீட்டு உபயோக பொருட்கள்,பெண்களுக்கான ஆடை அணிகலன்கள்,என நூறுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன..

மேலும் பேஷன் ஷோ,குழந்தைகளுக்கான ஓவியம், பாட்டு,நடனம் போன்ற போட்டிகள் ,அவார்டு ஷோ என அனைத்தையும் ஒரே இடத்தில் காணும் விதமாக இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது..

கோவையில் அனைத்து விதமான பொழுது போக்கு அம்சங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளை கூடிய இது போன்ற பிரம்மாண்ட விற்பனை கண்காட்சியை தொடர்ந்து நடத்தி வருவதாகவும்,
விடுமுறை காலத்தில் குடும்பத்துடன் வந்து காணும் வகையில் இந்த கண்காட்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் நடைபெறுவதாக என்.ஐ.ஈவென்ட்ஸ் நிர்வாக இயக்குனர் ராஜா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *