பாட்டாளி மக்கள் கட்சி புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் பட்டானுர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னாள் தலைவர் ஜி. கே. மணி உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் ஊழல் மலிந்த மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரமும் காலமும் வந்துவிட்டது, சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தைரியம் இல்லாத முதல்வராக ஸ்டாலின் உள்ளார் என்று பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் விமர்சித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சி புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் பட்டானுர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னாள் தலைவர் ஜி. கே. மணி உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

பொதுக்குழுவில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

2024-ம் ஆண்டு நடத்திய போராட்டங்கள் ஆர்ப்பாட்டம் மூலம் கிடைத்த அனுபவத்தை வைத்து நம் தேர்தல் பணியாற்ற வேண்டும். கட்சி தொடங்கி 35 ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஆட்சியில் அமர முடியவில்லை,இதை மனதில் வைத்துக் கொண்டு தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றார்.

தமிழகத்தில் மக்கள் விரோத ஊழல் மலிந்த ஆட்சி நடைபெற்று வருகிறது தெருவுக்கு தெரு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அரசை மக்கள் விரும்பவில்லை என்று குறிப்பிட்டார்.

120 தொகுதிகளில் முதல் கட்டமாக குழு அமைத்து தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளதாகவும் தொடர்ந்து 234 தொகுதிகளிலும் தேர்தல் பணியை தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர் வருகின்ற ஆண்டு முழுவதும் உங்களுடன் களத்தில் நிற்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

கடந்த 5 ஆண்டுகளில் 37 முறை இட ஒதுக்கீடு கேட்டு போராட்டங்கள் நடத்தி உள்ளோம்,இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால் சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி இட ஒதுக்கீடு வழங்கி இருக்கலாம், ஆனால் இட ஒதுக்கீடு வழங்க மனமில்லை, படிப்பிற்கும் வேலை வாய்ப்புக்கு மட்டுமே இட ஒதுக்கீடு கேட்கிறோம் என்பதை இந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றமே சொல்லுகின்றது, இட ஒதுக்கீட்டு போராட்டம் நடத்தினால் தேர்தல் ஆதாயம் என்று பேசுகிறார்கள் என்கின்றனர்.

திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் காலமும் நேரமும் வந்துவிட்டது என்பதை மனதில் வைத்து தேர்தல் பணியாற்ற வேண்டும்,2026 -ல் அமையப்போகின்ற ஆட்சியில் நமது பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அதை விட்டுவிட்டு பேனர்களில் என்னுடைய போட்டோ வரவில்லை உன்னுடைய ஃபோட்டோ வரவில்லை என்று உங்களுக்குள் அடித்துக் கொள்கிறீர்கள் எந்த பேனரானாலும் அய்யா போட்டா மட்டும்தான் இருக்க வேண்டும் எனது போட்டோ கூட தேவையில்லை என்று கேட்டுக் கொண்ட அவர் நாம் ஆட்சியாளர்களிடம் சண்டை போட வேண்டும் அதை விட்டுவிட்டு நமக்குள் சண்டை போட்டுக் கொண்டிருக்க கூடாது என்று வலியுறுத்தினார்.

2026-ல் நாம் ஆட்சி வரவேண்டும் நாம் நடத்திய மாநாடு மாதிரி தான் தமிழகத்தை ஆளும் தகுதி நமக்கு உள்ளது கூட்டணியை நாம் உருவாக்க வேண்டும் என்றும் பேசிய அன்புமணி ராமதாஸ்,1969-ல் எப்படி காங்கிரஸ் அழிந்ததோ அதேபோன்று 2026-ல் திமுக அழியும் என்றார்.

கடலூரில் வெள்ள பாதித்தவர்களுக்கு 2000 சென்னையில் வெள்ளம் பாதித்தவர்களுக்கு 6000 வழங்கி மக்களை இந்த அரசு வஞ்சிக்கிறது மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒரு பிடி மண்ணை கூட எடுக்க விடமாட்டோம் என்று பேசிய அவர்

இட ஒதுக்கீடு நமது உரிமை சமூக நீதி போராட்டத்திற்கு தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர்..

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தைரியம் இல்லாத முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார். ஆந்திரா கர்நாடகா ஒரிசா போன்ற மாநில மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்போது ஏன் தமிழகத்தில் மட்டும் முடியாது என்று கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *