கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே பாபநாசத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாளை முன்னிட்டு தமாகா கட்சியினர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா….
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சருமான ஜி கே வாசன் அவர்களின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மேற்கு மாவட்டம் சார்பில் 108 சிவாலயத்தில் சிறப்பு வழிபாடு செய்து ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தஞ்சை மேற்கு மாவட்ட தலைவர் என்.கே.சேகர் தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் சந்திரசேகர மூப்பனார், சுதாகர் மூப்பனார் சுரேஷ் மூப்பனார் மிதுன் மூப்பனார், ஆகியோர் கலந்துகொண்டு 200க்கும் மேற்பட்ட ஏழை எளியவர்களுக்கு வேட்டி சேலை வழங்கினர்.
இதில் தஞ்சை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநில மாவட்ட வட்டார நகர நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.