அரியலுாரில் த.மா.க தலைவர் ஜிகே வாசன் எம்.பி பிறந்தநாளை முன்னிட்டு தாமாகவினர்,கோதண்ட இராமசாமி கோயிலில் சிறப்பு வழிபாடு .
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சருமான ஜி கே வாசன் எம்பி 60வது பிறந்த நாளை முன்னிட்டு,அரியலூர் மாவட்ட த.மா.க வினர் சார்பில், அருள்
மிகு ஸ்ரீ கோதண்ட இராமசாமி திருக்கோயிலுள்ள பெருமாளுக்கு, அவரது பெயரில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு அரியலூர் மாவட்ட த.மா.க தலைவர் பனங்கூர் எஸ் ஜெயராமன் தலைமை தாங்கினார். தொடர்ந்து 250க்கும் மேற்பட்ட ஏழை எளிய பெண்களுக்கு மாவட்ட த.மா.க தலைவர் பனங்கூர் எஸ் ஜெயராமன் சேலைகள் வழங்கி னார். நிகழ்ச்சிக்கு கட்சியின் டெல்டா மண்டல வர்த்தக அணி தலைவர் பனங்கூர் சி.காமராஜ், மாநில சிறப்பு அழைப்பாளர் ஆண்டிமடம் விஸ்வநாதன்,மாநில செயற்குழு உறுப்பினர் எஸ் .ஆர் எம் .குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் கட்சியின் மாவட்ட பொருளாளர் கல்யாண சுந்தரம்வரவேற்றார்.இந்நிகழ்வில் கட்சியின்மாவட்டத் துணைத் தலைவர் வழக்கறிஞர் பழனிச் சாமி,மாவட்ட பொதுச் செயலாளர்
ஏ வி செல்வராஜ்,டெல்டா மண்டல மாணவர் அணி தலைவர் மனோஜ் குமார்,மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் தங்கதுரை,மாவட்ட விவசாய அணி தலைவர் வேத நாயகம்,அரியலூர் வட்டார தலைவர்கள் பனங்கூர் சுப்பிர மணியன், கடுகூர் காமராஜ்,
மகளிர் அணி நிர்வாகி மணக்கால் செந்தாமரை, அரியலூர் நகர தலைவர் தளபதி சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.