மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம், அரசு அருங்காட்சி யகம் மற்றும் அமைதி சங்கம் இணைந்து நடத்திய குளிர்கால குழந்தைகள் கொண்டாட்டம் நிகழ்ச்சிக்கு காந்தி நினைவு அருங்காட்சியகத்
தின் செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார்.
அமைதி சங்கத் தலைவர் சரவணன் அனைவரையும் வரவேற்றார். அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சி யாளர் மருதுபாண்டியன் துவக்க உரை யாற்றினார்.
எழுத்தாளர் முருகேச பாண்டியன் குழந்தைகளிடத்தில் மதுரை சார்ந்த பாடல்களைப் பாடி, ஆடி உற்சாகப் படுத்தி , புதிர்கள் சொல்லி, மதுரை பற்றிய சுவையான செய்திகளை, எடுத்துரைத்தார். ஓவியர் ஸ்ரீ ரசா குழந்தைகளுக்கு ஓவியம் வரைவது குறித்து பயிற்சி அளித்தார். சிவா பாடலின் பாடி உற்சாகப்படுத்தி
னார். ஒருகாமி பயிற்றுனர் அமல்ராஜ் குழந்தைகளுக்கு காகித பொம்மை கள் செய்ய கற்றுத் தந்தார்.
காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் கல்வி அலுவலர் நடராஜன் காந்தியின் வருகை குறித்து பேசினார் செசி நிறுவன பொறுப்பாளர் சூர்யா நன்றி கூறினார் கடவூர் ,சசத்திரபட்டி, அலங்காநல்லூர், ஊமச்சிகுளம், கோமஸ் பாளையம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இப் பயிற்சியில் பங்கேற்றனர்.