இரா. பாலசுந்தரம்- செய்தியாளர், திருவாரூர்.
திருவாரூர் பெரியகோவிலில் மகா பிரதோஷ வழிபாடு
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மார்கழி மாத சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று மாலை அசலேஸ்வரர் மற்றும் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், அதனைத் தொடர்ந்து மூலவர் அபிஷேகமும், பிரதோஷ நாயகருக்கு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.