எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே நந்தனாருக்கு நந்தி விலகி நின்ற ஸ்தலமான திருப்புன்கூரில் மார்கழி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருப்புன்கூரில் சொந்தமான இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அருள்மிகு சௌந்தரநாயகி அம்மன் உடனுறை சிவலோகநாதர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

இக்கோவில் நந்தனாருக்கு நந்தி விலகிய ஸ்தலமாகும்.சிறப்புமிக்க இக்கோவிலில் இன்று மார்கழி மாத சனி பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது.
பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு 1500 லிட்டர் பால், தயிர். சந்தனம். திரவிய பொடி. மஞ்சள் பொடி, விபூதி. தேன், இளநீர், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு வகையான அபிஷேக பொருட்களை சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஓதுவார்கள் திருமுறை பாட சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து புதிய வஸ்திங்கள் சாற்றப்பட்டு அருகம்புல். வில்வ இலை, பல்வேறு மலர்களால் ஆன மாலைகள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானையும் சிவலோகநாத சுவாமியையும் வழிபாடு செய்தனர்.