ராஜபாளையம் நுகர்வோர் பொருட்கள் விநியோகஸ்தர்கள் சங்க ஆலோசனை கூட்டம் ,தலைவர் எஸ்எஸ. கிருஷ்ணகுமாரசாமிராஜா தலைமை வகித்தார், பிகே, சண்முகநாதன், பிஎம், கதிரேசன் முண்ணிலை வகித்தனர்,
கூட்டத்தில் தேசிய மளிகை வியாபாரிகள் சங்கத்தின் அமைப்பாளர் டாக்டர்.பி.எம்.கணேஷ்ராம் மற்றும் எஃப்எம்சிஜி விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தேசியத் தலைவர்,தைரிஸ்டர் ஆகியோரின் பிரதிநிதித்துவத்தின் பேரில், மத்திய அமைச்சர் ஸ்ரீ பியூஷ் கோயல் சம்பந்தப்பட்ட விரைவு வணிகம் மற்றும் அதன் செயல்பாடுகளை முறைப்படுத்த ஒப்புக்கொண்டதற்கு நன்றி தெரிவித்தும் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து முழுமையடைந்த ராஜபாளையம் ரயில்வே சுரங்கப்பாதையை திடீரென நிறுத்தியதை, உடனே செயல்பாட்டிற்கு கொண்டுவர பிரபஞ்ச சக்தியை பிரார்த்தனை செய்தும்.
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்,தொழிலதிபர் ஸ்ரீ.ரதன் டாடா சங்க செயற்குழு உறுப்பினர் வேலாயுதம் ஆகியோரின் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது,
புதிய நிர்வாகிகள் தேர்வில்,தலைவராக எஸ்.சுந்திர கணேசன்
செயலாளராக ஜி.மாரிமுத்து பொருளாளராக வி.ராமசுப்பிரமணியன்,பி.எம்.சண்முகநாதன் தலைமையில் செயற்குழு டி.ரவீந்திரன் தலைமையிலான நிர்வாகக் குழு
பி.என்.முருகன் தலைமையில் ஏற்பாட்டுக் குழு நியமிக்கப்பட்டனர்,
எஸ் சுகீதர் ஒருங்கிணைத்தார் எஸ், சுந்தரகணேஷ் நன்றி தெரிவித்தார்