கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு முதலாம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு 1000 நபர்களுக்கு அன்னதான விழா நடைபெற்றது. முன்னதாக விஜயகாந்த படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
பின்னர் 1000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேமுதிக மாவட்ட பிரதிநிதி புளியம்பட்டி திருநாகவுக்கரசு தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மாவட்ட செயலாளர் சின்னராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் வேலு, மாவட்ட துணை செயலாளர் முருகன், புளியம்பட்டி ஊராட்சி தலைவர் ரங்கநாதன், புளியம்பட்டி ஊர் கவுண்டர் மணிவண்ணன், காவேரிப்பட்டிணம் ஒன்றிய செயலாளர் விஜய்வல்லரசு, ஒன்றிய பொருளாளர் கண்ணகன், ஒன்றிய துணை செயலாளர் குமார், சமூக வலைத்தள அணி மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்ட கட்சியை சேர்ந்த பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். விஜயகாந்த்தின் நினைவையொட்டி இரவு தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது.