திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கடந்த ஒரு வாரமாக அரையாண்டு தேர்வு விடுமுறையையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகளவில் உள்ளது. வார விடுமுறையான கடந்த வாரம் முதல் டிச.31 நள்ளிரவு புத்தாண்டை கொண்டாட தற்போது சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
மேலும் சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் அதிரிப்பால் கொடைக்கானலின் நுழைவு பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி, நகர் பகுதி மற்றும் அனைத்து சுற்றுலா இடங்களிலும் கடும் வாகன நெரிசலுடனும், புத்தாண்டை வரவேற்க்கும் விதமாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.