கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கோவை மண்டல மாநாடு
அமைச்சர் செந்தி்ல் பாலாஜி தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன் குமார் ஆகியோர் பங்கேற்பு
கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கோவையில் நடைபெற்ற கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் செந்தி்ல் பாலாஜி தெரிவித்துள்ளார்…
கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கோவை மண்டல மாநாடு கோவையில் கொங்கு மண்டல தலைவர் முகம்மது ரபீக் தலைமையில் நடைபெற்றது..
இதில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் பொன் குமார் கலந்து கொண்டு, மாநாட்டை கொடியேற்றி துவக்கி வைத்தார்..
இதில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் தொழிலாளர்கள் நலன் சார்ந்த பல்வேறு நல திட்டங்களை அறிவித்த தி.மு.க.தலைமையிலான தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..
மாநாட்டில் கோவை,திருப்பூர்,நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்….
மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ்நாடு மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தி்ல் பாலாஜி கலந்து கொண்டு பேசுகையில்,கடந்த 2021 ஆம் ஆண்டுக்கு முன் பத்து ஆண்டுகளாக நடைபெற்ற ஆட்சியில் நல வாரியத்தின் உறுப்பினர்கள் சேர்க்கை குறைந்த நிலையில், 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மூன்றரை ஆண்டுகளில் நல வாரியத்தில் மீண்டும் பதினோரு இலட்சம் புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ளதை சுட்டி காட்டினார்..
தொடர்ந்து பேசிய அவர் சுமார் 2250 கோடி அளவிற்கு முழுமையான நிதி உதவிகளை நொழிலாளர் களுக்கு வழங்கி உள்ளதாக கூறிய அவர் , தேர்தல் வாக்குறுதி இல்லாத திட்டங்களாக அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை அறிவித்து உலக அளவில் கவனத்தை ஈர்த்த திராவிட மாடல் அரசாக நமது தமிழக அரசு செயல்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார்…
மாநாட்டில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார்,
பொள்ளாச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி,தி.மு.க.மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக்,தொ.மு.ரவி,தளபதி முருகேசன் மற்றும் மாநாட்டு குழு நிர்வாகிகள் மாநில பொருளாளர் ஆறுமுகம்,பொது செயலாளர் கவிஞர் குருநாகலிங்கம்,மாநில துணை தலைவர் இராம வெங்கடேசன்,
மற்றும் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்..