கடலூர்மாவட்டம் விருத்தாசலத்தில் இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வாரின் 11_ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பாலக்கரையில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், நெற்கதிர்கள் ஆகியவற்றை கொண்டு விவசாயிகள் அஞ்சலி செலுத்தினர்.நம்மாழ்வாரின் வாழ்வியல் முறை விவசாயிகளுக்காக அவர் ஆற்றிய தொண்டு மற்றும் இயற்கை வேளாண்மை பற்றி விவசாயிகள் விளக்கி கூறி ஐயா நம்மாழ்வருக்கு விவசாயிகள் அஞ்சலி செலுத்தினர்