வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுக்கா போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர்கள் நல சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று பாலாஜி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சங்கத் தலைவர் சிவப்பிரகாசம் தலைமை வகித்தார். செயலாளர் சிவக்குமார், பொருளாளர் அலெக்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் கலந்து கொண்டவர்களை ஆலோசனை குழு அன்பழகன் வரவேற்றார்.கூட்டத்தில் துறையூர் நகருக்கு தனியாக காவேரி கூட்டு குடிநீர் திட்டம் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புறவழிச் சாலை அமைக்க உத்தரவு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் கூட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. கூட்டத்தில் துணைத் தலைவர் இளையராஜா, துணை செயலாளர் பாபு சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் நடராஜ், சதீஷ், சசிகுமார், மாதேஷ் ,தொழில்நுட்ப ஆலோசகர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.