C K RAJAN
Cuddalore District Reporter
94884 71235
கடலூர் கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவி 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையினை மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டார்
கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவி 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று பார்வையிட்டார்.
தமிழுக்கு பெருமை சேர்த்த அய்யன் திருவள்ளுவருக்கு பெருமை சேர்த்திடும் வகையில் முக்கடல் கூடும் கன்னியாகுமரியில் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் டாக்டர். மு.கருணாநிதி அவர்களால் அய்யன் திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டதன் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி 8 அடி உயர அய்யன் திருவள்ளுவர் சிலை மாதிரி அமைக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் பார்வையிடும் வண்ணம் வைக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், ராட்சச பலூன் பறக்கவிடுதல், சுயப்புகைப்படம் எடுக்கும் காட்சிப்படம் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் 61601 ஏராளமானோர் கண்டுகளிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு பகுதியில் அய்யன் திருவள்ளுவர் சிலை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் ஏராளமான பொதுமக்கள் சிலையினை பார்வையிட்டு, சுயபுகைப்படம் எடுத்து வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.கே.நாகராபூபதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெ.பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.