செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் செங்குந்தர் பேட்டை இருளர் குடியிருப்பு பகுதிக்கு
சாலை வசதி கேட்டு மதுராந்தகம் கோட்டாட்சியரிடம் மனு வழங்கினர்.
செங்குந்தர் பேட்டை பொன்னியம்மன் குட்டைக்கரையைச் சேர்ந்த இருளர் இன மக்கள் சுமார் 70 ஆண்டுகளாக மேற்கண்ட பகுதியில் நிரந்தரமாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இருளர் இன மக்கள் பகுதியில் சாலை வசதி இல்லாத
தால் தனியாருக்கு சொந்தமான நிலத்தின் வழியை பாதைக்காக பயன்படுத்தி வந்தனர் மேலும் இருளர் இன பகுதிக்கான குடிநீர் குழாய் பாதையும் அந்த வழியாக தான் சென்று கொண்டு இருக்கிறது. கடந்த ஒரு வார காலமாக அச்சாலையை
தனிநபர்கள் மறித்து வருகிறார்கள், காம்பவுண்ட் சுவர் அமைக்க ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகிறது.
மேலும், எங்களை இந்த பாதை வழியாக வரக்கூடாது என அடியாட்கள் வைத்து மிரட்டுகிறார்கள். மேலும், நகராட்சிக்கு சொந்தமான சாலை மற்றும் மழைநீர் வடிகால் செல்லும் இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள்.என புகார் தெரிவித்தனர் இது குறித்து ஆகவே மதுராந்தகம் கோட்டாட்சியர்
தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து வழி பாதையும்,
குடிநீர் இணைப்பையும் மீட்டு தருமாறு வன்கொடுமை தடுப்பு மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு விழிப்பு குழு உறுப்பினர் ஜி.ஜெ.பிரபாகரன் தலைமையில் மனு வழங்கினர்.
அப்போது கவுன்சிலர் சசிகுமார் உட்பட ஆனந்தன் மற்றும் பலர்
உடனிருந்தனர்.