கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் , பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தட்ர‌அள்ளி ஊராட்சியில் மாண்புமிகு துணை முதலமைச்சர் பிறந்த தினத்தை முன்னிட்டு, ராமர் கொட்டாய்,சீகலஅள்ளி காலனி, தட்ரஹள்ளி கூட்ரோடு ஆகிய பகுதிகளில் இருவண்ண கழக கொடியேற்றியும்,500 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது மாவட்ட அவைத்தலைவர்T.A.நாகராஜ் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்.,MLA, சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

உடன் காவேரிப்பட்டினம் ஒன்றிய கழக செயலாளர் கா. மகேந்திரன் மற்றும் தட்ரஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், எருமாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் விமலா பெரியசாமி, வெண்ணிலா முருகேசன், அகரம் ஊராட்சி மன்ற தலைவர் அறிவொளி இராமமூர்த்தி மற்றும் மாநில,மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நகர பேரூர் செயலாளர்கள்,கவுன்சிலர்கள்,அனைத்து சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள்,ஊராட்சி மன்ற தலைவர்கள்,துணை தலைவர்கள்,கிளை செயலாளர்கள்,கழக நிர்வாகிகள்,மூத்த முன்னோடிகள், BLA2 உறுப்பினர்கள்,பூத் கமிட்டி உறுப்பினர்கள், தொண்டர்கள்,பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *