இராசிபுரம்:
திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் அதிமுக முன்னாள்
அமைச்சர்கள் கைது
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் திமுக., அரசை கண்டித்து ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே அதிமுக., ஆர்ப்பாட்டம் …
அதிமுக., முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா உள்ளிட்ட 700க்கும் மேற்பட்ட கட்சியினர் கைது…
சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பாலியல் சீண்டல்கள் முதலானவற்றை தடுக்க தவறிய, சட்ட ஒழுங்கை பாதுகாக்க தவறிய விடியா திமுக., ஸ்டாலின் மாடல் ஆட்சியை கண்டித்து, நாமக்கல் மாவட்ட அதிமுக., சார்பில்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சரோஜா உள்ளிட்ட 700க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.