விவசாயிகளுக்கு கரும்பு விலையை 1டண்ணுக்கு ரூ.6000 வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், தேர்தல் நேரத்தில் திமுக அரசு விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற
வில்லை என கண்டித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேலுசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் தெரிவித்துள்ளதாவது
தமிழகத்தில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலன் கருதி கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் திமுக அரசு ஆட்சி பொறுப்பிற்கு வந்தவுடன் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4000/ம் என, விலை உயர்த்தி நிர்ணயம் செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுத்து திமுக அரசு ஆட்சி பொறுப்பிற்கு வந்து நான்கு ஆண்டு காலம் ஆகியும், கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததை கண்டித்தும்.
தற்போது கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலை நிர்வாகம் மூலம் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3151/ மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த விலை தமிழக கரும்பு விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை இல்லை, இதனால் கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தற்போது தமிழகம் முழுவதும் கரும்பு சாகுபடி செய்யும் பரப்பளவை குறைத்து விட்டனர்.
தற்போது கரும்பு சாகுபடி செய்யும் உற்பத்தி செலவினங்களான உழவுக் கூலி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, உரம், பூச்சி மருந்து ஆகிய இடு பொருட்களை ஏற்றி வரும் வாகன வாடகை, கரும்பு அறுவடை செய்யும் வெட்டுக் கூலி ஆகியவற்றின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது, தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொள்ளும் போது கரும்பு சாகுபடி செய்யும் தமிழக விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலையாக தமிழ்நாடு அரசு 2024-2025 ஆம் ஆண்டு அரவை பருவத்திற்கு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.6000 என விலை உயர்த்தி நிர்ணயம் செய்து அறிவிக்க கோரி நாமக்கல் மாவட்டம் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு வருகின்ற 31.12.2024 செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணிக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது எனவே அனைத்து விவசாயிகளும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தரும்படி அனைவரையும் அழைக்கிறேன் . இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்