தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா நல்லூர் சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. திருநெல்வேலி திருமண்டல பேராயர் அறிவர் மகாகனம் பானபாஸ் தலைமையேற்று கிறிஸ்துமஸ் சிறப்பு செய்தி வழங்கினார்.
முன்னதாக தீப்மீனாட்சிப்புரம் சேகர தலைவர் கிங்ஸ்லி ஜான் துவக்க ஜெபம் ஆற்றினார்.
கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் எஸ். ஜேசு ஜெகன் திருமறை பகுதி வாசித்தார் மற்றும் விருந்தினர்களை கவுரவித்தார். கல்லூரி முதல்வர் முனைவர். எஸ்.வில்சன் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி பேராசிரியர்கள் கிறிஸ்துஸ் பாடல்களை பாடினர்.
பேராயர் தம்முடைய சிறப்பு செய்தியில் கிறிஸ்துவின் மகிமையான பிறப்பு, மனுக்குலதின் மீட்சி. கிறிஸ்தவ அன்பு, தியாகம் முதலியவற்றை வேதாமபகுதிகளில் இருந்தும் நடைமுறை வாழ்க்கையில் அதற்கான சாட்சிகளையும் எடுத்துக்காட்டுகளையும் பகிர்ந்தார்.
கல்லூரி சேப்லைன் பேராசிரியர் சுரேஷ் சாலமன் கல்லூரியின் சிற்றாலய ஆண்டு அறிக்கையை வாசித்தார்.
திருநெல்வேலி திருமண்டல பேராயர் அறிவர் மகாகனம் பர்னபாஸ் மற்றும் சிறப்பு விருந்தினர்களான திருநெல்வேலி திருமண்டல உபதலைவர் சுவாமிதாஸ், திருநெல்வேலி திருமண்டல மேற்கு சபைமன்ற தலைவர் மற்றும் நல்லூர் சேகர தலைவர்
பிரே ஜேம்ஸ், பிஷப் சேப்லைன் பொன்ராஜ், ஆலங்குளம் சேகர தலைவர் கிங்ஸ் ஹேமில்டன் திப்பணம்பட்டி சேகர தலைவர் ஜான் வெஸ்லி, என்.ஜி.ஓ பி காலனி சேகர தலைவர் சாம் பிரகாஷ், மனக்காவலம்பிள்ளை சேகர தலைவர் ஆல்வின் பிரைட் பாப்பாக்குடி சேகர தலைவர் ஆசிர் மாணிக்கராஜ், ஆகியோர் வேதாகளும் மற்றும் குடில் அமைப்பு போட்டிகள் மாநில மற்றும் பல்கலை கழக அளவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றோர். புதிய விஞ்சான கண்டுபிடிப்புகான தமிழக அரசின் ஒரு இலட்சம் பரிசு பெற்ற மாணவிகள் மற்றும் கல்லூரிக்கு 100 சதவீதம் வருகை புரிந்த மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.
பின்னர், இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளர்களான மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் பிரதிநிதி பேராசிரியர் முனைவர் முத்து, தூய யோவான் கல்வியியல் கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் கே பி கே செல்வராஜ், நல்லூர் மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை வசந்தி ஜான்சிராணி, பாளையங்கோட்டை கதீட்ரல் பள்ளி தாளாளர் சாலமோன் டேவிட், இடையன்குடி கால்டுவெல் நூற்றாண்டு நினைவு மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் ஜேகர். தென்னிந்திய திருச்சபை சினாட் நிர்வாகக் குழு உறுப்பினர் மகாராஜா சிங், கல்லூரி ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் . பால்ராஜ், சைரஸ் நல்லூர் சேகர பொருளாளர் ஜனதா செல்வம், திருமண்டல ஊழியர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
கிறிஸ்துவின் பிறப்பு முன்னனைக் காட்சியை கல்லூரி மாணவிகள் மிகச் சிறப்பாக நிகழ்த்திகாட்டினர். கல்லூரி மாணவ மாணவியர்கள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. திருமண்டல மேற்கு சபைமன்ற தலைவர் மற்றும் நல்லூர் சேகர தலைவர் பிரே ஜேம்ஸ் நிறைவு ஜெபம் செய்தார்.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளாராக பேராசிரியை அனிதா சுவிட்லின் முனைவர் செல்வக்குமாரி மற்றும் முனைவர் பேன்சி கிருபை செயல்பட்டனர். நன்றியுரையை பேராசிரியை முனைவர் பேன்சி கிருபை செய்தார். போராசிரியர் சாமுவேல் செல்வின் துறை மற்றும் முதுகலை ஆங்கிலத் துறை மாணவி ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
திரளான அளவில் பேராசிரியர்கள். மாணவ மாணவியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். விழா முடிவில் அனைவருக்கும் ஐக்கிய விருந்து வழங்கப்பட்டது.