கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் முப்பெரும் விழா..
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில்
டி.கே.கே சபா மற்றும் கும்பகோணம் ரோட்டரி சங்கம் நடத்தும் முப்பெரும் விழா ஜனரஞ்சனி மஹாலில் ரோட்டரி சங்க தலைவர் இசையாசு தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுநர் பாலாஜி, சிட்டி யூனியன் வங்கி தலைவர் பாலசுப்பிரமணியம், சங்கீத பூஷனம் அண்ணாதுரை, மற்றும் ரோட்டரி சங்க செயலாளர்கள் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர்.
விழாவில் தவில் கலை இளமணி அன்னவாசல் அமிர்தவர்ஷணி, நாதஸ்வராய சக்கரவர்த்தி பரமேஸ்வரன் பாலகிருஷ்ணன் ஆகியோரின் இசை நிகழ்ச்சியும் , பரதநாட்டியம் மற்றும் கல்லூரி மாணவிகளின் மாசில்லா மார்கழி விழிப்புணர்வு பிரச்சாரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.