தாராபுரம் செய்தியாளர்
பிரபு செல்:9715328420
தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தையும் போலீசார் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு மற்றும் காவல்துறையினரை கண்டித்து தாராபுரத்தில் த.வே.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்!..

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்:அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக விஜய் எழுதிய கடிதத்தை பொதுமக்களுக்கு அனுமதியின்றி விநியோகம் செய்ததாக த.வெ.க. தொண்டர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் தொண்டர்களை பார்க்கச் சென்ற தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தையும் போலீசார் கைது செய்தனர். இதன்படி அனுமதியின்றி கூட்டத்தை கூட்டியதாக ஆனந்தை கைது செய்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த திருப்பூர் கிழக்கு மாவட்ட த.வே.கவினர் மாவட்ட மகளிர் அணி தலைவி செல்வி ரமேஷ் தலைமையில் புதிய பேருந்து நிலையம் முன்பு த.வே.க.கட்சி கொடியை கையில்யேந்தி தமிழக அரசுக்கு எதிராகவும் காவல்துறைக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் போலீசார் அவர்களிடமிருந்த கட்சி கொடிகளை பிடுங்கியும் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனால் தாராபுரம் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சொர்க்கம் ரமேஷ் உள்ளிட்ட கட்சியினர் பலர் உடன் இருந்தனர்.