மதுரையில் பிப்ரவரி 9 ல் எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்த விருக்கும் வக்ஃபு உரிமை மீட்பு மாநாடு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் மாநாடு ஒருங்கிணைப்பு குழு தலைவரும் மாநில பொதுச் செயலாளர் அகமது நவவி தலைமையில் மதுரை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார் மாநில செயலாளர் நஜ்மா பேகம், மாநில செயற்குழு உறுப்பினர் பாத்திமா கனி மற்றும் மாநாட்டு கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
வக்ஃபு உரிமை மீட்பு மாநாட்டின் தமிழக பொறுப்பாளரும் மாநில பொதுச் செயலாளருமான அபூபக்கர் சித்திக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் 09-02-2025 அன்று நடைபெறும் வக்ஃபு உரிமை மீட்பு மாநாடு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் நிறைவில் மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் நன்றி கூறினார்.