தமிழ் மதுரை அறக்கட்டளை, தமிழ் மதுரை சங்கப்பலகை சார்பில் சிறப்புக் கவியரங்கம் மற்றும் தமிழ் மதுரை அறக்கட்டளை நிறுவனர் கவிச்சிங்கம் சித்தார்த்பாண்டியன் அவர்களின் தாயார் அம்மா அழகம்மாள் பெரியசாமி அவர்களுக்கு தமிழ் வணக்க நிகழ்வு நடைபெற சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் திரு. மணி பாரத் மோசஸ் அவர்கள் தமிழ் வணக்க நிகழ்வில் தாயாருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து தொடங்கி வைத்தார். மேலும் பொற்கைபாண்டியன் கவிதா மண்டல தலைவர் கவிவித்தகர் பொற்கைபாண்டியன், பார்வட் பிளாக் அம்மாசி, சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர். கவியரங்கத் தலைமையினை வாழும் ஔவை அன்புவல்லி தங்கவேலன் மற்றும் சொல்லின் செல்வர் காதர் பாட்சா அவர்கள் ஏற்று கவியரங்கிணை சிறப்பாக நடத்தினர்.
கவியரங்க நிகழ்வில் 20 மேற்பட்ட கவிஞகர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்க்கான ஏற்பாடுகளை சங்கப்பலகை சார்ந்த ஈஸ்வர ராஜா மற்றும் சங்கப்பலகை செயலர் முனைவர் சா. சே. ராஜா, ஒருங்கிணைப்பாளர்கள் கவிஞர். நாகா, கவிஞர் நிறைமதி செய்தனர். விழாவில் கலந்து கொண்டு கவிபாடிய கவிஞர்கள் அனைவருக்கும் சங்கப்பலகை நிறுவனர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பாராட்டு பரிசு வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. விழாவினை கவிச்சிகரம் முத்து விஜயன் தொகுத்து வழங்கினார். இறுதியில் கவிச்சிங்கம் சித்தார்த்பாண்டியன் நன்றியுரை வழங்கினார்.