மெழுகுவர்த்தி மற்றும் வண்ண பலூன்களை பறக்க விட்டு பொருட்காட்சி வளாகத்தி்ல் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டம்
புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி பொதுமக்கள் உற்சாகம்
கோவை வ.ஊ.சி மைதானத்தில் நடைபெற்று வரும் ஜங்கிள் வேர்ல்டு பொருட்காட்சி வளாகத்தில் புத்தாண்டு வரவேற்கும் விதமாக மெழுகுவர்த்தி மற்றும் வண்ணபலூன்கள் பறக்க விடப்பட்டது..
2024 ஆம் ஆண்டு முடிந்து 2025 ஆம் பிறக்க உள்ள நிலையில் உலகம் முழுவதும் புத்தாண்டு மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்..
இந்நிலையில் உலக மக்களின் ஒற்றுமையை போற்றும் விதமாகவும்,புதிய ஆண்டின் வரவை கொண்டாடும் விதமாகவும் கோவை வ.ஊ.சி.மைதானத்தி்ல் நடைபெற்று வரும் ஜங்கிள் வேர்ல்டு பொருட்காட்சியில் புத்தாண்டு சிறப்பு நிகழ்அச்சு நடைபெற்றது..
பொருட்காட்சியில் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை காண வந்த அனைத்து தர மக்கள் இணைந்து வண்ண பலூன்கள் மற்றும் மெழுகுவர்த்தி பலூன்களை பறக்க விட்டு ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்..