துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வெங்கடாசலபுரம் ஆர்எஸ்கே (RSK INTERNATIONAL SCHOOL, CBSE, ) சார்பில் 31/12/2024 அன்று போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பாலக்கரை பிரசன்னா மஹால் முன்புறம் துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் பேரணியை தொடங்கி வைத்தார்.அப்போது பேசிய காவல் ஆய்வாளர் செந்தில்குமார்,மாணவர்கள் இளமைப்பருவத்தை நல்வழியில் பயன்படுத்த வேண்டும், போதைப்பழக்க வழக்கங்கள் பாவச் செயலாகும்,போதை பொருள் உபயோகிப்பதை தடுப்பதற்கும், அதனை ஒழிப்பதற்கும், மற்றவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் எனகேட்டுக்கொண்டார்.பேரணியில் சுமார் 210 பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். துறையூர் பாலக்கரையில் துவங்கிய இப்பேரணி திருச்சி ரோடு, பேருந்து நிலையம் வழியாக முசிறி பிரிவு ரோடு ரவுண்டானாவில் நிறைவடைந்தது.

முன்னதாக மாணவ-மாணவிகள் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.பேரணியில் பள்ளி முதல்வர் ஆர்.பானுமதி மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.பேரணிக்கு உதவி காவல் ஆய்வாளர்கள் ராஜேஷ்குமார், ,சஞ்சீவி, போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர்கள் அப்துல்லா, தங்கம் மற்றும் காவலர்கள் போக்குவரத்தை சீர்செய்து பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *