எபி பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர்.
கூட்டுறவு பொங்கல் என்ற மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளின் விற்பனையை பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தொடங்கி வைத்தார்
பெரம்பலூர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் நியாய விலைக்கடை அங்காடியில் கூட்டுறவுத்துறையின் சார்பில் “கூட்டுறவு பொங்கல்” என்ற மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளின் விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தொடங்கி வைத்தார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் எதிர்வரும் 14.01.2025 அன்று முதல் உலகத் தமிழர் அனைவராலும் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கும் நிலையில் பொங்கல் பண்டிகையை ஏழை, எளிய, நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடி மகிழ கூட்டுறவுத் துறையின் சார்பாக “கூட்டுறவு பொங்கல்” என்ற பெயரில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்க, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை தயார் செய்து பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களான நியாய விலைக்கடைகள்*, நுகர்வோர் பண்டக சாலைகள், கூட்டுறவு விற்பனை சங்கம், சுய சேவை பிரிவுகள், சில்லறை விற்பனை நிலையங்கள், போன்ற அனைத்து விற்பனை அலகுகள் மூலம் “இனிப்பு பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் ரூ.199க்கும் மற்றும் “சிறப்பு பொங்கல் தொகுப்பு” என்ற பெயரில் ரூ.499க்கும் மளிகைப் பொருட்கள் சந்தை விலையை விட குறைந்த விலையில் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இனிப்பு பொங்கல் தொகுப்பில் பச்சரிசி (BPT 43) 500 கிராம், பாகு வெல்லம் 500 கிராம், ஏலக்காய் 5 எண்ணிக்கை, முந்திரி 50 கிராம், ஆவின் நெய் 50 கிராம், பாசிப்பருப்பு 100 கிராம், உலர் திராட்சை 50 கிராம், சிறிய பை 1 எண்ணிக்கை ஆகிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரூ.199 க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
சிறப்பு பொங்கல் தொகுப்பில் மஞ்சள் தூள் 50 கிராம், சர்க்கரை 500 கிராம், துவரம் பருப்பு 250 கிராம், கடலை பருப்பு 100 கிராம், பாசிப்பருப்பு 100 கிராம், உளுத்தம் பருப்பு 250 கிராம், உப்பு 1 கிலோ, நீட்டு மிளகாய் 250 கிராம், தனியா 250 கிராம், புளி 250 கிராம், பொட்டுக்கடலை 200 கிராம், மிளகாய்த்தூள் 50 கிராம், செக்கு கடலை எண்ணெய் 1/2 லிட்டர், கடுகு 100 கிராம், சீரகம் 50 கிராம், மிளகு 25 கிராம், வெந்தயம் 100 கிராம், சோம்பு 50 கிராம், பெருங்காயம் 25 கிராம், மளிகை பை 1 எண்ணிக்கை ஆகியவை அடங்கிய தொகுப்புகள் ரூ.499 க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது.
எனவே கூட்டுறவுத் துறை மூலம் விற்பனை செய்யப்படும் பொங்கல் மளிகை தொகுப்புகளை பொதுமக்கள் குறைந்த விலையில் தரமான பொருட்களை வாங்கி அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் . ச.சுந்தரராமன், பொது விநியோக திட்ட துணைப்பதிவாளர் .சிவக்குமார், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.