கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கும்பகோணத்தில் விடுதலைத்தமிழ் புலிகள் கட்சி தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் கலந்தாய்வு கூட்டம்…..
விடுதலைத் தமிழ் புலிகள் கட்சியின் நிறுவனர் குடந்தை அரசன் பங்கேற்பு…..
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் விஜய் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
இதில் தஞ்சை வடக்கு மாவட்டத்தில் விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் 2026 தேர்தல் பணிகள் குறித்தும் , திருவிடைமருதூர் தொகுதியில் யார் களப்போராளி என்ற தலைப்பில் 269 இடங்களில் தெருமுனை விளக்கு கூட்டம் , மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் விடுதலைத்தமிழ்ப் புலிகள் கட்சியின் நிறுவனர் குடந்தை அரசன் பேசியதாவது…..
அண்ணா பல்கலைக்கழக மாணவியின் வாழ்வில் விவகாரத்தை கண்டித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொள்ளும் செயல் ஒரு எதிர்க்கட்சிக்கான செயல்பாடு என்பது நடைமுறையில் இல்லாத ஆனால் பிற்போக்கு தனமான கருத்துக்களை திணிக்கின்ற செயலாக இருக்கிறது அதனை வன்மையாக விடுதலை தமிழ் புலிகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது எனவும், அவர் சாட்டையில் அடித்துக் கொள்ள வேண்டும் என்றால் மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு அடித்து இழுத்துவரப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் பாஜக அரசு கண்டித்தும் இதுவரையில் அவர் பதில் அளிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் ரேடியோ வெங்கடேசன், மாநில அமைப்பாளர் தளபதி சுரேஷ், மாநில செய்தி தொடர்பாளர் சாக்கோட்டை ராஜா, மாநில மகளிர் அணி செயலாளர் ரோஸ்லின்,மாநில இளந்தமிழ் புலிகள் பாசறை மாநிலச் செயலாளர் செந்தோழன், சமூக ஊடகப்பிரிவு மாநில செயலாளர் மணிகண்டன் மற்றும் விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.