நகைச்சுவை மன்ற ஆண்டு விழா” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மக்கள் மருத்துவர் டாக்டர் ந.சேதுராமன், மருத்துவச்செம்மல் டாக்டர் எஸ்.குருசங்கர் ஆகியோர் நல்லாசியுடன் நாடக நடிகர் எஸ்.எம்.காளிமுத்து மற்றும் நாடக நடிகை எஸ்.டி.தாமரைச்செல்வி அவர்களுக்கு நகைச்சுவை மன்ற தலைவர், செயலர், பட்டிமன்ற நடுவரும், பேராசிரியரும், நடிகருமான முனைவர் கு. ஞானசம்பந்தன், நகைச்சுவை மன்ற அமைப்பு செயலாளர் வி.எம்.பாண்டியராஜன் இணைந்து விருதும், ரொக்கப் பரிசும் வழங்கினார்கள்.
உடன் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், அக்ரி ஆறுமுகம், ஜீ.இளங்கோவன், எம்.ஜெகதீசன், பால.கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் நகைச்சுவை கூறிய அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. நல் உள்ளங்களை தேர்வு செய்து விருது வழங்கி கௌரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அனைவருக்கும் சிற்றுண்டியும், தேநீரும் வழங்கப்பட்டது.
விழா முடிவில் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஊழியர்களும், நகைச்சுவை மன்ற உறுப்பினர்களும், ஒருங்கிணைப்பாளர் ஏ.இஸ்மத் இணைந்து செய்து வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.