தொழுப்பேடு தேசிய நெடுஞ்சாலை சீரமைக்க தேசிய சமூக நல அமைப்பின் மனித உரிமை கோரிக்கை.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தொழுப்பேடு
தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு
NSWF தேசிய சமூக நல அமைப்பின் மனித உரிமை பிரிவு
செங்கல்பட்டு மாவட்ட குழுவின் சார்பில் சாலையை சீரமைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

தொழுப்பேடு தேசிய நெடுஞ்சாலை சீரமைத்தல் பற்றி புகார் பதிவு செய்துள்ளனர். அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் தொழுப்பேடு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே விபத்து ஏற்படும் சூழலில் பள்ளம் மேடாகவும் குண்டும் குழியமாகவும் பல நாட்களாக காணப்படுகிறது.

திண்டிவனம் மார்க்கம் சென்னை செல்லும் சாலையில் ஒரு நாளைக்கு 90 லட்சம் வாகனங்கள் செல்கிறது.
அப்படி என்றால் ஒரு நாளைக்கு எத்தனை லட்சம் அதிகாரிகள் அந்த சாலையில் செல்கிறார்கள் எத்தனை லட்சம் அரசியல்வாதிகள் அந்த சாலையில் செல்கிறார்கள் எண்ணி பார்ப்போம் என தெரிவிக்கின்றனர்.

சில அதிகாரிகள் சொகுசு கார்களில் செல்வதனால் இவர்களுக்கு மற்றவர்களின் துன்பங்கள் பற்றி புரியவில்லை என
தேசிய சமூக நல அமைப்பினர் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் சீராக உள்ள சாலைகளிலே தினமும் பல விபத்துக்கள் நடந்து
பல உயிர்கள் இறக்கும் சூழல் ஏற்படுகிறது.

பொதுமக்களின் உயிர்களை காப்போம் விபத்துக்கு ஏற்படாமல் தடுப்போம் அதற்கு உடனே சாலையை தரமாக சீரமைக்க வேண்டும் என்பது .NSWF தேசிய சமூக நல அமைப்பின் தேசிய தலைவர் டாக்டர் சிவனேசன் மற்றும் அமைப்பின் மனித உரிமை பிரிவின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் மு.வேலு மாவட்ட இணைத் தலைவர் பாலசுப்ரமணியன் மாவட்ட துணை பொருளாளர் ஏஜாஸ் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் சார்பில் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *