பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
சென்னையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு நீதி கேட்டும் தமிழக அரசை கண்டித்தும் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் அணி சார்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் சௌமியா அன்புமணி அவர்களை கைது செய்ததை கண்டித்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாமக சார்பில் மாவட்ட செயலாளர் தமிழ் மறவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இதில் பாமக மாநில அமைப்பு தலைவர் டி எம் டி திருமாவளவன் முன்னிலை வகித்தார் இதில் பாமக நிர்வாகிகள் எம் கே ஆர் ராஜேந்திரன், ராமதாஸ், ராமநாதன் தங்கராசு அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் நகர செயலாளர் பரசுராமன் நன்றி கூறினார்.