ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்றல் நகர் செல்லும் செண்பகத் தோப்பு சாலையில் கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து இரண்டாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் வள்ளி மயில் ராஜா என்பவர் விஸ்வம் டெக்ஸ் என்ற பெயரில் ஜவுளிக்கடை மற்றும் நைட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் இவரது கடையில் இவரது தங்கை முத்துமாரி வேலை பார்த்து வருகிறார் முத்துமாரியின் கணவர் சுரேஷ் போக்குவரத்து காவல்துறையில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்
இந்த கடையை வழக்கமாக வள்ளி மயில் தான் காலையில் திறப்பார் இன்று உறவினர் ஒருவர் இறந்துவிட்ட நிலையில் கடையை திறப்பதற்காக தனது தங்கை முத்துமாரியை அனுப்பி வைத்துள்ளார் முத்துமாரி கடையை திறக்கும் பொழுது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த நபர் ஒருவர் முத்துமாரியின் கண்ணில் மிளகாய்த்தூளை தூவி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினை பிடித்து இழுத்துள்ளார்
முத்துமாரி செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டதால் பாதிச் செயின் மட்டும் அருந்த நிலையில் கொள்ளையனிடம் முத்துமாரி போராடி அருந்த செயினையும் பிடித்துக் கொண்டார் முத்துமாரி கொள்ளையனிடம் போராடிய கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதை பார்த்த கொள்ளையன் தப்பி ஓடி உள்ளான் .
காலை 10 மணிக்கு நடந்த இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியானதில் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி பிரீத்தி
வடக்கு காவல் நிலைய ஆய்வாளர்
அசோக்பாபு ஆகியேர் சிசிடிவி காட்சி களை வைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர்,