கோவை காளப்பட்டி அரசு மேல் நிலைபள்ளி மாணவ,மாணவிகளுக்கு நேரு நகர் லயன்ஸ் சங்கம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு சார்பாக விலையில்லா அடையாள அட்டைகள் வழங்கும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது..
கோவை காளப்பட்டி அரசு மேல் நிலைபள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா அடையாள அட்டைகள் மற்றும் பள்ளி வளாக பராமரிப்புக்கென புல் வெட்டும் இயந்திரம் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது..
நேரு நகர் லயன்ஸ் சங்கம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு ஆகியோர் சார்பாக நடைபெற்ற இதற்கான விழாவில் நேரு நகர் லயன்ஸ் சங்க தலைவர் பள்ளியின் முன்னால் மாணவி சுப்பு செந்தில் குமார் தலைமை தாங்கினார்.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் வினிதா முன்னிலை வகித்தார்..
விழாவில் பள்ளியின் தலைமையாசிரியர் மாரிச்செல்வி அனைவரையும் வரவேற்று பேசினார்..
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நேரு நகர் லயன்ஸ் சங்க முன்னால் தலைவர் பாஸ்கர், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய செயல் செயலாளர், நேரு நகர் லயன்ஸ் சங்கம் பாரதி மண்டல தலைவர் செந்தில் குமார், ஆகியோர் கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினர்.
இதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தை பராமரிப்பெதற்கென புல் வெட்டும் இயந்திரம் வழங்கப்பட்டது..
இந்நிகழ்ச்சியில்,
லயன்ஸ் கிளப் பார்க் தலைவர் லோகநாதன்,முன்னால் மாமன்ற உறுப்பினர் மோகன் ரங்கநாதன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு ,ராஜகோபால், உட்பட பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்…