கடத்தூர் யூனியனுக்கு உட்பட்ட புட்டிரெட்டிப் பட்டி பஞ்சாயத்து பகுதியில். சூரன் கொட்டாய். வினநாயகர்கோவில், தெரு, குருமன்கொட்டாய். மணல்மேடு, இந்திராநகர், ரயில்வே கேட், பால ஒட்டு, உள்ளிட்ட 9 கிராமங்கள் உள்ளது இதில் 3000 மேற்பட்ட குடும்பதினர் வசித்து வருகின்றனர்,
புட்டிரெட்டிப்பட்டி கூட்ரோடு பகுதியில் சுமார் 15 நாட்களுக்கு மேலாக ஒகேனக்கல் குடிதண்ணீர் வழங்கப்படாததால் பெரும் அவதிக்கும் சிரமத்திற்கும் உள்ளாகி வருகவதாக கூறி,நேற்று காலை கடத்தூர்- புட்டிரெட்டிப்பட்டி ரோட்டில் காலிகுடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அந்த அந்த வழியாக வந்த அரசுபஸ் நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்து உடனடியாக ஊராட்சி நிர்வாகம் மற்றும் கடத்தூர் போலீஸ் எஸ்.ஐ.நவீன். செல்வராஜ், சௌந்தரராஜன், சேகர் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியல் கைவிட செய்தனர்